Lost your password?...

இந்தியாவுடன் கூட்டுப் பயிற்சி: தென் கொரிய கடலோர காவல் படை கப்பல் இன்று சென்னை வருகை

இந்தியா – தென் கொரியா கட லோரக் காவல்படையின் கூட்டுப் பயிற்சி 5-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, தென் கொரிய கடலோரக் காவல் படைக் கப்பல் இன்று சென்னை வருகிறது.

இந்தியா – தென் கொரியா நாடுகள் இடையே பொருளாதாரம், ராணுவ உறவுகள் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இரு நாடுகளுக்கிடையே கடலோரக் காவல் படையின் கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கூட்டுப் பயிற்சி வரும் 5-ம் தேதி சென்னை கடல் எல்லைப் பகுதியில் நடைபெறுகிறது. இதற்காக, தென் கொரியா நாட்டு கடலோரக் காவல்படையின் பதாரோ என்ற கப்பல், காவல்படை அதிகாரி ஓ தேயோக் தலைமையில் இன்று (2-ம் தேதி) சென்னை வருகிறது.

இப்பயிற்சியின்போது கடல் பகுதியில் தேடுதல், கடல் கொள்ளைகளைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வர். இருநாட்டு வீரர்களும் தங்களுடைய கல்வி, தொழில்நுட்பத் திறன்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதோடு, தங்கள் பணி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வர். இக்கூட்டுப் பயிற்சியை இந்தியக் கடலோர காவல்படையின் இயக்குநர் ஜென்ரல் ராஜேந்திர சிங், தென் கொரியா நாட்டு கடலோர காவல்படையின் ஆணையர் ஜென்ரல் பார்க் யூங் மின் பார்வையிடு கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன