அகவை ஒன்றில் அடியெடுக்கும் மகள்- பிறந்தநாள் கவிதை

பெருமழை அதனுடன் சேர்ந்தே பிறந்ததில் 
கலக்கம் நீங்கி மங்களச் செய்தியில்
அனைவரும் மகிழ்ந்து களித்துக் கொண்டாடி
இனிமை அடைந்தோம் சேயவள் பிறப்பினால்!

சோர்வு நீங்கி கண்கள் விழிக்கும் 
தருணம் வரவே எதிர்நோக்கும் சுற்றம்- நீ
கண்கள் திறந்து பார்த்திட்ட தருணம் 
எத்தனை ஆனந்தம் அளவிட முடியாதே!

தகப்பனைப் போல் முகத்தின் அமைப்பாம்
தாயினைப் போல் செயல்களின் தொகுப்பாம்
ஆயினைப் போல் அழகிய முகமாய்
காண்பவர் பகிர்ந்தார் அவரவர் கருத்தே!

மாதங்கள் ஒவ்வொன்றும் மாறிடும் முகமே
நிலைபெறும் முகமதை காணவே துடிக்கும்
பெற்றோர் குணங்கள் அடைதல் அறிந்தே 
எத்தனை சேட்டைகள் நிறைந்தே வளர்கிறாய்!

செயல்கள் சிரிப்பாய் வெளிப்படும் நேரம்
நோய்களில் தவிப்பை உணர்த்தும் காலம்
செல்ல மொழிகளில் எதிர்வினை ஆற்றும் 
அழகிய செயல்களில் கரைந்திடும் நாட்கள்!

தத்தித் தத்தி நடப்பது அழகாம்
கூவி அழைக்கும் செம்மொழி அழகாம்
கணக்கிலா உவகை எழுதிட

மறந்தநாள் வாழ்த்துக்கள். 

வாழ்த்துக்களுடன்,
முனைவர். அ. ஆனந்த்.