Lost your password?...

தமிழ்-கொரியா மொழி தொடர்பு – தென் கொங்கு-தென் கொரியாவின் கயா பன்னாட்டுக் கடல்சார் வணிக மேலாண்மை

தென் கொங்கு-தென் கொரியாவின் கயா பன்னாட்டுக் கடல்சார் வணிக மேலாண்மை

தமிழகக் கடலோடிகளின் வரலாறு நீண்ட நெடியது. ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கான சான்றுகள் சீனத்திலிருந்தும் கிரேக்க ரோம வரலாற்றிலிருந்தும் கிடைக்கிறது

பசிபிக் கடலில் ஏற்படும் பருவ மாற்றத்தால் வெளிக்கிளம்பும் தென் மேற்கு வடகிழக்கு பருவக் காற்றின் ஆரம்பம் முடிவு அதன் வேகம் நீரலைகளின் போக்கு எழுச்சி ஆகியவற்றை பட்டறிவின்மூலம் அறிந்து திரைகடல் ஓடினர் என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகள் உள்ளன

கி.மு முதலாம் நூற்றாண்டில் தமிழர் கடல் வணிகம் உச்சம் தொட்டது. தங்கத்தை மூலதனமாகக் கொண்ட சமூகம் வணிகத்தால் அதைப் பன்மடங்கு பெருக்க அவர்களின் திறணைத் தமிழ் சமணப் பள்ளிகளும் அறநெறி வணிக நன்னெறியை வலியுறுத்த தமிழ் பெளத்தமும் இணைந்து செயல்பட்டு தமிழர்கள் உலகிம் மிகப்பெரிய செல்வ வளம் கொழிக்கும் நாட்டினராக முன்னேற வழி செய்தது

பெருவணிகம் கடலோடிகளின் துணைகொண்டு வெற்றிகரமாக நடக்க செம்மையான வணிக வலைத் தொடர்பு கட்டமைக்கப்பட்டு இருந்தாதா்க நீலகண்ட சாஸ்திரியார் பதிப்பித்த வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்பில் தகவல் உள்ளது

தென்கொங்கில் ஐவர் மலையில் சமணப்பள்ளிகள் இருந்ததை இன்று கிடைக்கும் எச்சங்கள் மூலம் அறியலாம். ஆசிரியர் புலவர் பள்ளி சங்கம் போன்ற சொற்றொடர்கள் சமணர்கள் தமிழுக்குக் கொடுத்த கொடை. பெண் ஆசிரியர்களும் சமணப் பள்ளியில் கல்வித் தொண்டு செய்ததை ஐவர் மலைக் குறிப்புகள் சுட்டுகின்றன

தன்னுடைய ஐந்து வது ஐந்தாவது திங்களில் பள்ளியில் சேரும் மாணவன் தன்னுடைய 11 வயதுவரை கல்விகற்று பின்னர் 11 ஆண்டுகள் சிறு வணிகத்தில் பொருள் கிடைக்கும் இடத்தில் கொள்முதல் செய்து பெரு வணிகர்களுக்கு விற்பனஒ செய்தும் அடுத்த 11 ஆண்டுகளுக்கு உதவியாளனாகவும் இன்னொரு 11 ஆண்டுகளுக்கு கூட்டாளியாகவும் அடுத்த 11 ஆண்டுகளுக்கு முதலாளியாகவும் பணிபுரியும் வழக்கம் இருந்ததாக வெளிநாட்டுப் பய்ணியர் குறிப்புகள் உள்ளன

தந்தையிடம் பொருள் எதிர்பாராது சிறு வயதில் தான் வணிகம் செய்து ஈட்டிய லாபத்தைத் தாயிடம் கொடுத்து உணவு உண்பது தன் கொள் முதல் விலை என்ன லாபம் எவ்வளவு என்று வெளிப்படையாகச் சொல்வதும் தமிழ் வணிகர்களின் பண்பு என்றும் இப்பண்புகளே அவர்களை உலகெங்கும் சிறந்த வணிகர்களாக ஏற்றம்பெற உதவியது என்றும் வெளிநாட்டுப் பயணியர் குறிப்பிடுகின்றனர்

கொள் முதல் செய்யும் இடத்தில் சிறு வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டு பெருவணிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு அவை தென் கொங்கின் நீர்வழி பெருவழிப்பாதைகள் வழியாக கரூரில் இருந்து காவிரி மூலமாக மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படும்

உள்ளூர் பெரு வணிகர்கத் தலைமை ஏற்கும் மாசாத்துவன் வெளிநாட்டு வணிகத்துக்குத் தலைமை ஏற்கும் மாநாய்க்கன் பெரும்பொருள் முதலீடு செய்து 200 பேர் அமர்ந்து செல்லும் வணிகக் கப்பல்களில் ஏற்றி அதனுடன் அவர்களுடைய முகவர்களை அனுப்புவர்

துறைமுகத்தை ஒட்டியுள்ள பட்டினம் பகுதியில் வெளிநாட்டு வணிகர்கள் இறக்குமதிப் பொர ட்களைக் கடைவிரிப்பதும் அதில் கிடைத்த தங்கத்தைக் கொண்டு ஏற்றுமதிப் பொருட்களைக் கொள்முதல் செய்து தங்கள் கப்பலில் ஏற்றிக்கொண்டு தங்கள் நாடுகளுக்குச் செல்வர்

கடல்வணிகம் பெரும்பாலும் கிழக்கிலும் மேற்கிலும் இந்துமாக்கடலில் நடைபெற்றது. இந்துமாக்கடலில் இருந்த பல தீவுக்ளை நன்கறிந்து தங்கள் மரக்கலங்களை அங்கே நிறுத்திப் பழுது பார்ப்பது அல்லது அங்கே உள்ள இன்னொரு மரக்கலத்துக்குச் சரக்கை மாற்றுவது என்று வணிகம் செய்தனர்

No automatic alt text available.

 

Image may contain: text

No automatic alt text available.

மே மாதம் தொடங்கும் தென் மேற்குப் பருவக் காற்றும் அக்டோபரில் தொடங்கு வடகிழக்குப் பருவக் காற்றும் தமிழ் வணிகத்துக்கான களம். காற்றின் திசையில் பயணித்து மே தொடங்கி ஜூலைக்குள் பல நாடுகளை அடைந்த தமிழர்கள் அவர்கள் திரும்பிவரச் சாதகமான வடகிழக்குப் பருவக் காற்று தொடங்கும் அக்டோபர்வரை அங்கேயே சில மாதங்கள் தங்க வேண்டிய சூழலை அவர்களின் மரபு சமயச் சார்பைப் பேண்வும் தங்கியுள்ள நாடுகளின் மரபு வளங்களை அறிந்துகொள்ள்வும் பயன்படுத்தினர்

வணிகக் கப்பல்களில் துறவிகளும் நுண்கலையினரும் தட்டான் தச்சர் போன்று தொழிலியளாளர்களும் பயணம் செய்தனர். காற்றுவழி சீரான போக்குவரத்துப் பாதையை அமைத்துக் கொடுத்தும் தீவுகளிலும் கடற்கரையிலும் இருந்த கடற்கொள்ளையினரிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வெளிநாட்டு அரசர்களுகு நிதி நல்கி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொண்டனர்

தமிழர் கடல்வழி வணிகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்ய பால்க் நீர் சந்தி மலாக்க நீர் சந்தி வடவிலங்கை அந்தமான் ஒட்டிய தீவுகளைப் பற்றி ஏற்கனவே வெளியாகியுள்ள தரவுகளைத் திரட்ட வேண்டும்

அத்தகவல்களை அறிவியல் புலத்தில் தொடர்ந்து வளரும் செய்மதித் தொழில்நுட்பத்தைப் யன்படுத்தி அறிவியல் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளை வெளிக்கொணர வேண்டும்

நாகராசன்

ஆசிரியர் குறிப்பு: திரு. நாகராசன் வடிவேல் அவர்கள் ஆய்வு சார்ந்த தமிழ்-கொரியா தொடர்பு குறித்த மொழியியல் எழுத்தாளர். தற்பொழுது சென்னையில் வசிக்கிறார்.

ஒப்புதல் மற்றும் நன்றி!: இந்த எழுத்தாக்கம் (படைப்பு) திரு. நாகராசன் வடிவேல்அவர்களுடையது என்பதை கொரிய தமிழ் தளம் வலைதளத்தின் ஆசிரியர் குழு ஒப்புமை செய்கிறது. அவ்வாறே! முனைவர் திரு. நாகராசன் வடிவேல் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கி கொரிய தமிழ் தளம் பாராட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *