Lost your password?...

வார்த்தை வழி தமிழ்க்கல்வி

– முனைவர் இரத்ன சிங், கொரியா தமிழ் தளம்

எந்த மொழியையும் வாசிக்க வேண்டுமென்றால் அதனுடைய எழுத்துக்களை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எழுத்துக்கள் அதிகமுள்ள மொழிகளை விரைவில், தெளிவாக வாசிக்க எளிதான கற்றல் மற்றும் கற்பித்தல் வழிமுறைகள் உதவியாக இருக்கும். எழுத்தை கற்று கொள்ளும் அதே வேளையில் வாசிக்கவும் கற்றுகொடுக்கும் வழிமுறை இதற்கு உகந்ததாக இருக்கும். இவ்வகையான கற்பித்தல் வழிமுறை கற்பவருக்கு ஆர்வத்தை தூண்டுவதாய் இருப்பது நலம். பொதுவாக பள்ளியில் தமிழ் கற்கும்பொழுது நமக்கு எழுத்தின் வடிவம் மற்றும் உச்சரிப்பு ஆகியவைகள் முதலில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. நாம் பள்ளியை அறியும் பல நாட்களுக்கு முன்பே அம்மா நமக்கு அம்புலி காட்டி சோறு ஊட்டி வார்த்தைகள் மூலம் தமிழை கற்றுத்தருகிறார். ஆக, நாம் செவிவழி அறிந்து கொள்வதே நமது மொழி கற்றலின் முதல் படி. இந்த இயற்கை வழி நின்று “வார்த்தை வழியான தமிழ் வாசிப்பு” என்ற கற்பித்தல் முறையை உருவாக்கியிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, அம்மா மற்றும் அப்பா என்ற இரண்டு வார்த்தைகளை உருவாக்கும் ‘அ’, ‘ப’, மற்றும் ‘ம’ என்ற எழுத்துகளிலிருந்து மாமா, பாப்பா, மற்றும் அப்பம் போன்ற வார்த்தைகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம். இந்த வழிமுறையை பின்பற்றி தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் கற்றுக்கொள்ள தேவையான பாடங்களை உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு பாடமும் இரண்டு நிமிடங்களில் பெற்றோர்களால் கற்றுத்தரமுடிகிற அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

“Learning Tamil Through Words”

By Dr. Rathna Singh, Korea Tamil Forum

To read any languages, fast recognition of the alphabets is very important. Simple teaching materials to teach languages like “Tamil”, which has numerous alphabets (247), needs efficient learning tool. In this regard, combining “Tamil alphabets” with “Tamil words” and “sentences” would be more convenient to learn. Such practice could draw interest of the people who wish to learn Tamil, especially younger kids. In schools, the “Tamil alphabets” and “words with pictures” are taught. However, the students can recognize the pictures but can’t quite read the words. As a matter of fact, mother teaches Tamil to the little ones through “words” while feeding and playing. Therefore, the process of learning a language begins with grasping words. Based on this concept, we have developed the teaching materials, “Learning Tamil through Words”. For example, the alphabets which make the words “அம்மா (mother) and அப்பா (father), i.e., ‘அ’ (A), ‘ம’ (m), and ‘ப’ (p) could be used to make other words such as, மாமா (uncle), பாப்பா (the female child), and அப்பம் (Bread) etc. Adopting this method, I have systematically made 50 plus lessons to learn to read Tamil. Upon completion of the provided lessons, one can easily read Tamil.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *